நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 8வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை அணி வீரர்கள் களத்தை சந்திப்பார்கள்.
இன்றைய போட்டி நடைபெறும் வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. இது சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக இருந்தாலும் மறுபுறம் அணியில் பௌலிங் சொதப்பலாக இருப்பது கவனிக்கத் தக்க ஒன்றாக உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், சிஎஸ்கே அணி வீரர்களுக்கு நெருக்கடியான சூழல் ஏற்படும்.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் 23 முறை மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 8 முறை மட்டுமே சென்னை அணியை வென்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் 195 முதல் 205 ரன்கள் வரை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தால் 185 முதல் 195 ரன்கள் வரை எடுக்க வாய்ப்பு உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளது. அதேசமயத்துல் பஞ்சாப் அணி வெற்றி பெறும் பட்சத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்..







