வாத்தி கம்மிங்; அடுத்தடுத்து வரும் தனுஷ் படங்கள்

வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 19ம் தேதி திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. ஜகமே…

வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 19ம் தேதி திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு திரையரங்கில் வெளியான தனுஷ் திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தில் பிரகாஷ்ராஜ் தனுஷிற்கு அப்பாவாகவும், பாரதிராஜா தாத்தாவாகவும் நடித்தனர். இவர்கள் மூவரின் கூட்டணி மற்றும் தனுஷ் – நித்யா மேனன் காம்போ பக்காவாக வொர்க் அவுட் ஆகியிருந்தது.

தனுஷின் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷின் அடுத்த படைப்பான ‘வாத்தி’ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாத்தி படத்தின் இயக்குநர் தெலுங்கில் கவனிக்கத்தக்க சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‘வாத்தி’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த நடிகையான சம்யுக்தா இதற்கு முன் 2018ம் ஆண்டு வெளியான ‘களரி’ படத்தில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் First Look போஸ்டர் ஜூலை 27ம் தேதி வெளியானது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதியில் இப்படத்தின் டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்தது படக்குழு. இதனையடுத்து, இப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகிவுள்ளது. இதனை படக்குழு தனது சமூகவலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தனுஷ் படங்களின் அப்டேட் வருவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

-சுஷ்மா சுரேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.