முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல்துறை

இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த சென்னை காவல்துறை முடிவெடுத்துள்ளது.

சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 30 நிமிட காணொலி மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று இந்த விழிப்புணர்வை உதவி ஆணையர், ஆய்வாளர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 3 பள்ளி/கல்லூரிகள் வீதம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பிரதிநிதிகளாக மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் போதைப் பொருள் பயன்பாடற்ற பகுதியாக உள்ளது என்பது உறுதி செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Advertisement:
SHARE

Related posts

நடிகை நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய நடிகை சமந்தா!

Vandhana

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்

காவல்துறையினருக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரிய வழக்கு…. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Saravana