ஜம்மு&காஷ்மீரில் எல்லை ஊடுருவல்; தேடுதலில் ராணுவம் தீவிரம்

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் எல்லை ஊடுருவல் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவல் நடைபெற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஊடுருவல்காரர்கள்…

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் எல்லை ஊடுருவல் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவல் நடைபெற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஊடுருவல்காரர்கள் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்திய ராணுவம் அவர்களுக்கு எதிரான தாக்குதலில் களமிறங்கியுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் உரி பகுதியில் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அதேபோல இந்த ஆண்டு இரு நாட்டு எல்லைகளிலும் எவ்வித போர்நிறுத்த மீறுதலும் நடைபெறவில்லை என லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும், ஊடுருவல்காரர்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தற்போது நிலைமை சீராக இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2016ல் இதே உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.