முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

”வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்!” – செல்வராகவன் அட்வைஸ்

வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு என்றும், வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் இயக்குநர் செல்வராகவன் அறிவுரை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். தனக்கே உரிய தனித்த பாணியில், வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களைத் தந்து, தமிழ் திரையுலகில் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை. நானே வருவேன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : அடித்து ஆடும் இபிஎஸ்; நின்று, நிதானிக்கும் ஓபிஎஸ் – தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு யாருக்கு?

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய இவர், பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, அண்மையில் மோகன் ஜி இயக்கிய ’பகாசூரன்’ திரைப்படத்தில் நடித்தார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கை தத்துவங்கள் தொடர்பான பதிவுகளை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. “வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு! அது உங்களைத்தான் அதிகம் காயப்படுத்தும். மனதிற்கும் சேதம் விளைவிக்கும். வாழ்க்கையில் பார்க்க எவ்வளவோ இருக்கின்றது. வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐ.என்.எஸ் விக்ராந்த் – என்னென்ன சிறப்பம்சங்கள்?

Web Editor

திருநெல்வேலியில் நடுரோட்டில் ரம்மி விளையாடி நூதன ஆர்ப்பாட்டம்

Web Editor

எல்.கே.அத்வானி பிறந்தநாள்; பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

G SaravanaKumar