சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படம் – சமந்தா

சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படம் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஷியான நடிகைகளில் ஒருவரான சமந்தா சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்…

சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படம் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஷியான நடிகைகளில் ஒருவரான சமந்தா சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் இயக்குகிறார். இப்படத்தின் டிரைலர் ஜனவரி 9 ஆம் தேதி வெளியானது.

இதையும் படிக்க: ஆஸ்கர் வெற்றி எதிரொலி: முதுமலையில் யானையை காண குவியும் சுற்றுலா பயணிகள்

மகாகவி காளிதாசர் எழுதிய புராணக் கதையான சாகுந்தலம் என்ற கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில், சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர். மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா – துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா நடித்துள்ளார்.

https://twitter.com/SVC_official/status/1623951565693538305?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1623951565693538305%7Ctwgr%5Ebd4cf4d68ca2a191f5e43b74e15b37fe031085d9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Fmar%2F14%2Fshaakuntalam-will-forever-be-close-to-me-says-actress-samantha-4016779.html

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த சமந்தா படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், கடைசியாக இன்றுதான் சாகுந்தலம் படத்தைப் பார்த்தேன். குணசேகரன் சார் எனது இதயத்தை வென்றுவிட்டீர்கள். என்ன அழகான படம். நமது பாரம்பரியத்தின் மிகப்பெரிய காவியத்தை அழகாக எடுத்துள்ளீர்கள். உணர்ச்சிகரமான இந்த காட்சிகளை ரசிகர்கள் குடும்பமாக கொண்டாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளது. குழந்தைகளே நீங்கள் ரசிக்கும்படியான மாயாஜாலமான உலகம் இந்தப் படத்தில் உள்ளது. இந்த அற்புதமான பயணத்திற்காக தில் ராஜூக்கும், நீலிமாவுக்கும் நன்றி. சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/Cpwl1lWLyMp/?igshid=YmMyMTA2M2Y=

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.