முக்கியச் செய்திகள் தமிழகம்

அவசர கால கதவை திறந்தது குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம்

தேஜஸ்வி சூர்யா விமானத்தில் அவசர கால கதவை திறந்தாரா என்பது பற்றி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளாக்கமளித்துள்ளார். 

டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று
விட்டு விமானத்தில் சென்னை திரும்பிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
நிருபர்களிடம் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேஜஸ்வி சூர்யா விமானத்தில் அவசர கால கதவை திறந்தது குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. டிசம்பர் மாதம் 10ந் தேதி சிறிய ரக விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றேன். தேஜஸ்வி சூர்யாவின் இருக்கை அருகே எனது இருக்கை இருந்தது என்றார்.

அத்துடன், 1 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் எமர்ஜன்சி கதவு திறந்திருப்பது போல் இருப்பதாக நாங்கள் கூறியதை தொடர்ந்து விமானியிடம் தெரிவிக்கப்பட்டது. அதை அவர் பார்த்த பிறகு பொறியாளர்கள் குழு அவசர கால கதவை சோதனை செய்யும் என கூறினார். பின்னர் பொறியாளர்கள் குழு அவசரகால கதவை கழற்றி மீண்டும் மாட்டியதாக கூறினார்.


மேலும், நடந்த அனைத்தையும் தேஜஸ்வி சூர்யாவிடம் விமான நிறுவனம் சார்பில் எழுத்து
பூர்வமாக எழுதிக் வாங்கி கொண்டனர். தெரியாமல் தேஜஸ்வி சூர்யா கை அதில்
பட்டிருந்தது. எனவே பயணிகளிடம் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குளிர்
காற்று வீசிறியை சரி செய்த போது தவறுதலாக நடந்தது என்றார்.

அத்துடன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். எமர்ஜன்சி கதவை அவ்வளவு எளிதாக யாரும் திறக்க முடியாது. தெரியாமல் நடந்த தவறு அது. எதிர்கட்சியினர் இதை ஊதி பெரிது படுத்துகின்றனர். விமானத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாற்றுக் கட்சியினரும் வந்தனர். விமானத்தின் கதவை நான்  திறந்ததாக ஒரு திமுக அமைச்சர் தவறான தகவலை பேசுவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வகை 2-ல் வரும் 23 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி!

ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரிப்பு

EZHILARASAN D

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் புதிய விதிகள்- 22ம் தேதி தீர்ப்பு

EZHILARASAN D