வாகன ஓட்டிகளே உஷார்…. வேகமாக சென்றால் வழக்கு பாயும்…!!

சென்னையில் வேகக் கட்டுப்பாட்டு அளவு நேற்றுமுதல் அமலுக்கு வந்தநிலையில், வேகக் கட்டுப்பாட்டை மீறியதாக 120 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இலகு ரக வாகனங்களின் வேக அளவு…

சென்னையில் வேகக் கட்டுப்பாட்டு அளவு நேற்றுமுதல் அமலுக்கு வந்தநிலையில், வேகக் கட்டுப்பாட்டை மீறியதாக 120 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இலகு ரக வாகனங்களின் வேக அளவு 60 கி.மீட்டரும், கன ரக வாகனங்களுக்கு 50 கி.மீட்டரும், இருசக்கர வாகனங்களுக்கு 50 கி.மீட்டரும், ஆட்டோவுக்கு 40 கி.மீட்டரும் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 30 கி.மீட்டராக வேக அளவு குறைக்கப்பட்டது. இது நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், வேகக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் குறித்து பேசிய ஆணையர் சுதாகர், சென்னையில் வேகக் கட்டுப்பாட்டு அளவு நடைமுறைக்கு வந்த பிறகு வாகனங்களில் அதிகளவில் வேகமாக சென்றவர்கள் மீது 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த கருவியில் வேகமாக செல்பவர்களை கண்டறியமுடியும். அதில், அதிகளவில் இருச்சக்கர வாகனம் மற்றும் கார்கள் தான் வேகக் கட்டுப்பாட்டை மீறியுள்ளனர். அதில் 5 நான்கு சக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். மற்ற எல்லா வழக்குகளும் இரு சக்கர வாகனங்கள் மீது பதியப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.