ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் வீசிய வீரர்கள்! பட்டியலில் முதலிடம் பிடித்த கோலி!!

ஒருநாள் போட்டியில் 49-வது சதம் விளாசி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி சமன் செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் சதம் விளாசிய விராட்…

ஒருநாள் போட்டியில் 49-வது சதம் விளாசி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி சமன் செய்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி இந்த சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிறந்த நாளில் விளாசியுள்ள இந்த சதம் அவருக்கு மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது.

இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்:

  • விராட் கோலி – 49 சதங்கள் (277 போட்டிகளில்)
  • சச்சின் டெண்டுல்கர் – 49 சதங்கள் (452 போட்டிகளில்)
  • ரோஹித் சர்மா – 31 சதங்கள் (251 போட்டிகளில்)
  • ரிக்கி பாண்டிங் – 30 சதங்கள் (365 போட்டிகளில்)
  • சனத் ஜெயசூர்யா – 28 சதங்கள் (433 போட்டிகளில்)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.