முக்கியச் செய்திகள் செய்திகள்

டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் லாரியில் தொங்கவிட்ட டிரைவர்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடி ஒன்றில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த முயன்ற டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் வரை லாரியில் தொடங்கவிட்டபடி சென்ற லாரி ஓட்டுநரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரி ஓட்டுநரைப் பிடிப்பதற்காக லாரியின் முன்புறம் உள்ள பம்பரில் சுங்கச்சாவடி ஊழியர் ஏறியுள்ளார். அப்போது, லாரியை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர், சுமார் 10 கி.மீ. தூரம் சுங்கச் சாவடி ஊழியரை தொங்கவிட்டபடி லாரியை ஓட்டியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆந்திர மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அமக்கதாடு அருகே உள்ள சுங்கச் சாவடியில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று சுங்கக் கட்டணத்தைச் செலுத்தாமல் சென்றுள்ளது. இதையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசலு என்பவர் லாரியின் முன்பக்கம் உள்ள பம்பர் மீது லாரி ஓட்டுநரைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் ஊழியரைப் பொருட்படுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் அந்த லாரியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதுகுறித்து ரோந்து பணி காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

லாரி ஓட்டுநரை மற்றொரு வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்த காவலர்கள், லாரி ஓட்டுநரை கைது செய்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா பாணியில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்கா!

Niruban Chakkaaravarthi

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் எப்போது?

EZHILARASAN D

PAN இந்தியா வில்லனாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி!

Vel Prasanth