இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 7 பேர் கைது

தஞ்சாவூர் அருகே 22 வயது இளம் பெண்ணை காமூகர்கள் 5 பேர் தூக்கி  சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.   தஞ்சாவூர் அருகே…

தஞ்சாவூர் அருகே 22 வயது இளம் பெண்ணை காமூகர்கள் 5 பேர் தூக்கி  சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

தஞ்சாவூர் அருகே தோழகிரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 22 வயது நிரம்பிய இளம் பெண். இவரை 5 பேர் திடீரென கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அருகில் உள்ள முந்திரி காட்டிற்கு தூக்கி சென்றதோடு, 5 பேரும் சேர்ந்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடினர். இதனால் பலத்த காயமடைந்த இளம் பெண்ணை, அந்த வழியாக சென்ற சிலர் மீட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

புகாரை தொடர்ந்து வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா விசாரணை நடத்தினார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டதாக கொடியரசன், கண்ணன், சாமிநாதன், சுகுமாரன், தமிழரசன் ஆகிய 5 பேரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக 2 பேர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.