12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சரின் இந்த முடிவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரவேற்றுள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் அவர், தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.