GOLD RATE | தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில் வாரத்தின் துவக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து 1,13,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.