முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோயில்கள் சார்பாக 14 ம் தேதி வரை 1 லட்சம் உணவுப்பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு

கொரோனா நோய் தடுப்புப்பணியில் கோயில்கள் சார்பாக ஒரு இலட்சம் உணவுப்பொட்டலங்கள் வரும் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினை போக்கும் விதமாகவும், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 05.06.2021 வரை நாள்தோறும் ஒரு இலட்சம் உணவு பொட்டலங்கள் கோயில்கள் மூலம் வழங்குமாறு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு காலம் மேலும் 14.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் உணவுப் பொட்டலங்களை நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு தொடர்ந்து வழங்கிடவும், இதனால் தேவைப்படும் கூடுதல் நிதியினை இந்து சமய அறநிலையத்துறையில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து தேவைப்படும் திருக்கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதை மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நலவாரியம் ஏற்படுத்தப்படும்:டிடிவி தினகரன்!

Karthick

வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ’நீல நிற டிக்’ நீக்கம் ஏன் : ட்விட்டர் விளக்கம்

Vandhana

அசாமில் கடும் நிலநடுக்கம்!

Jeba