வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ’நீல நிற டிக்’ நீக்கம் ஏன் : ட்விட்டர் விளக்கம்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களை அடையாளப்படுத்தும் நீல நிற ’டிக்’ நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் நீல நிற டிக் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில்…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களை அடையாளப்படுத்தும் நீல நிற ’டிக்’ நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் நீல நிற டிக் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது.

ட்விட்டரில் பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நீல நிற டிக் வழங்கப்படுகிறது. இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனிப்பட்ட முறையில் ஒரு ட்விட்டர் கணக்கு வைத்திருந்தார். இந்த கணக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதிக்கு பிறகு பயன்படுத்தாமல் இருந்து வந்தார். அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி என்ற அடிப்பைடையில் அமைந்த ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார். அவர் பயன்படுத்தி வந்த தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருக்கும் நீல நிற ‘டிக்’ குறியீட்டை ட்விட்டர் நீக்கி விட்டது. இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் நீல நிற டிக் வழங்கப்பட்டது.

இது குறித்து ட்விட்டர் கூறுகையில் ‘ இந்த ட்விட்டர் கணக்கு கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து வந்தது. தற்போது சரிபார்க்கப்பட்டு நீல நிற டிக் மீட்டமைக்கப்பட்டுள்ளது’. வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.