முக்கியச் செய்திகள் குற்றம்

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவன் உட்பட 3 பேர் கைது!

சென்னை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கே.கே. நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ. இவருக்கும் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்கு பின்னர் பாலமுருகனும் அவரது தாய் அம்சாவும் சேர்ந்து, ஜோதிஸ்ரீயை வரதட்சணைக் கேட்டு கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதனால் திருமணம் ஆன ஒரு சில நாட்களிலேயே கணவரை பிரிந்த தனது பெற்றோர் வீட்டில் வசித்து ஜோதிஸ்ரீ வந்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு பிறகு ஜோதிஸ்ரீயின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வைத்து மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது மாமியார் அம்சா, அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரை மீறி ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் தளத்திற்கு சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா முதல் தளத்திற்கு செல்லும் மின் வயரை துண்டித்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ஜோதிஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜோதிஸ்ரீ தனது செல்போனில் உருக்கமான ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ”தனது மரணத்திற்கு கணவரும் மாமியாரும் தான் காரணம்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கணவர் பாலமுருகன், அவரது தாய் அம்சா மற்றும் சகோதரர் சத்யராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜோதிஸ்ரீ கைப்பட எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன்

Niruban Chakkaaravarthi

அரசியலுக்கு வந்ததால் எனக்கு 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு: கமல்ஹாசன்!

Halley karthi

மதுரையில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு: முதல்வர்!