அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரத்த தானத்தையும், மரங்கள் வளர்ப்பையும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சனன் கலிதா. இவர் ரத்த தானம் செய்தல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல், மரங்களை பாதுகாத்து வளர்த்தல் ஆகியவற்றை மக்களிடம் வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அசாமில் இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கிய கலிதா, பல்வேறு மாநிலங்களைக் கடந்து, 5வது மாநிலமாக தமிழ்நாட்டில் பயணித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ள கலிதா அங்கிருந்து 6வது மாநிலமாக கேரளா நோக்கி பயணிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள் : பேச்சுவார்த்தையில் உடன்பாடு – ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ்..!
கையில் பணம் எதுவும் எடுத்துச் செல்லாமல், பொதுநலனை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் பஞ்சனன் கலிதாவுக்கு பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவரை ஊக்கப்படுத்தியும் வருகின்றனர். இன்றைய இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் நிலையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பஞ்சனன் கலிதா, மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.







