பேச்சுவார்த்தையில் உடன்பாடு – ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ்..!

வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் ஓடும் என்றும், தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு…

வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் ஓடும் என்றும், தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில், 120 ஆம்னி பேருந்துகளை தமிழ்நாடு அரசு பறிமுதல் செய்தது. இதனை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்தது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை இணை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அதன்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..! – வைகோ சாடல்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பேராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். பேருந்தை மறித்து சோதனை நடைபெறாது என்றும், பறிமுதல் செய்த பேருந்துகளை விடுவிக்க அரசு உறுதியளித்ததாகவும் கூட்டமைப்பினர் கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.