ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை அடுத்து சொந்தமாக ஒரு சமூக வலைதளம் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபைடன் 73 தேர்தல் குழு வாக்காளர்கள் வாக்குகளை அதிகம்பெற்று வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. அப்போது திடீரென நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே திரண்ட டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். இது வைரலானதை தொடர்ந்து அந்த வீடியோக்களை டிவிட்டர் பேஸ்புக் நிறுவனங்கள் தங்கள் பக்கத்திலிருந்து நீக்கின. மேலும் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் சொந்தமாக ஒரு சமூக வலைதளம் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக பேசிய டிரம்ப், ட்விட்டர் நிறுவனத்தின் அச்சுறுத்தலைக் கண்டு நாம் அமைதி அடைந்து விடக்கூடாது என்று கூறி உள்ளார். மேலும் தான் தனியாக ஒரு சமூக வலைதளம் தொடங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.