ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!

இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுவிட்டு சென்ற கொள்ளையர்கள் என்பது போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி படித்திருப்போம். அதுபோன்று…

இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுவிட்டு சென்ற கொள்ளையர்கள் என்பது போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி படித்திருப்போம்.

அதுபோன்று இல்லாமல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாய் குரைக்கத் தொடங்கியதால் ஏடிஎம்மில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் சென்றுவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் சதி கிராமத்தில் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.
இந்த வீட்டின் உரிமையாளர் மேல் தளத்தில் வசித்து வருகின்றார். அவர் நாயை வளர்த்து வருகின்றார்.

கீழ்த்தளத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சிகள் கொள்ளையர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களைக் கண்ட நாய் குரைக்கத் தொடங்கியது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த கொள்ளையர்கள், ஏடிஎம் மையத்திலிருந்து வெளியே வந்து தப்பி ஓடிவிட்டனர்.

அந்த ஏடிஎம்-இல் ரூ.27 லட்சம் இருந்தது. கொள்ளையர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெரற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.