செங்கம் அரசு மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர்
நாய்கடி சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் 44 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட தலைமை மருத்துவமனையாக செங்கம் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாகவும்,
100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இந்நிலையில் செங்கம் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தெருநாய் கடித்து குதறியதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு வந்தனர். செங்கம் பேரூராட்சி தேவானந்தல், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் நாய் கடி சிகிச்சைக்காக 5க்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது.







