பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் 240 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவக்கம்!

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் 240 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரதில் உள்ள கால்டன் சமுத்ரா தனியார் நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி…

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் 240 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரதில் உள்ள கால்டன் சமுத்ரா தனியார்
நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது.  முந்திரி, திராட்சை,  பாதாம்,  பிஸ்தா உள்ளிட்ட 120 கிலோ டிரை புருட்ஸ் அடங்கிய பொருட்களுடன் லிக்கர் என்று சொல்லக் கூடிய ஒயின்,  ஓட்கா,  ஜின் உள்ளிட்ட மது பானங்களை ஊற்றி ஊற வைக்கும் பணி இன்று துவங்கியது.

இந்த நட்சத்திர விடுதியில் இன்று உருவாக்கிய கேக் தயாரிக்கும் பொருட்களை,  40 நாட்களுக்கு பிறகு டிசம்பர் மாத இரண்டாம் வாரம் அல்லது அதற்கு மேல் வரை வைத்திருந்து அதன் பின் கேக் தயாரிக்கும் பணி துவங்கும் என்று ஓட்டல் முதன்மை சமையலர் சரவணன் தெரிவித்தார்.   120 கிலோ ட்ரை ப்ரூட்ஸ் கலந்த கலவையில் 240 கிலோ பிளம் கேக் செய்யலாம் என ஓட்டல் முதன்மை சமையலர் சரவணன் தெரிவித்தார்.

இதில் சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.