This News Fact Checked by ‘Boom’
ரூ.2700 கோடி மதிப்புள்ள அரண்மனையில் பிரதமர் மோடி வசிப்பதாகவும், விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடி அரண்மனை இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது. படத்தில், பிரதமர் மோடி ஒரு விலைமிகுந்த கடிகாரம் அணிந்திருப்பதை காணலாம். அவருக்குப் பின்னால் பல ஆடம்பரமான பொருட்கள் ஒரு ஷோகேஸில் வைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற பல ஆடம்பர பொருட்கள் இருக்கும் பிரதமர் இல்லத்தின் படம் இது என்று ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். வைரல் படம் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் உருவாக்கப்பட்டதா BOOM உண்மைச் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்துக்கு இடையே, ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. ஒருபுறம், ஷீஷ்மஹால் விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக குறிவைக்கிறது. மறுபுறம், பிரதமர் ரூ.2700 கோடி செலவு செய்து அரண்மனை கட்டியதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.









