29.5 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழ்நாட்டிற்கு உபரி நீரை வாரி வழங்கும் கர்நாடகா- கணக்கில் வருமா? வராதா ?

தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.  

1. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2. மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்காமல் பருவமழை பெய்து அணைகள் நிரம்பும் போது வெளியேறும் உபரிநீரை அதிகளவு தமிழ்நாட்டிற்கு கர்நாடகா வழங்கி வருகிறது.

3. 2018ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை விட அதிகளவு நீரை அதாவது வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை வழங்கி கர்நாடக கணக்கு காட்டியுள்ளது.

4. 2018 -19ம் ஆண்டில் கர்நாடகாவிலிருந்து 405.43 TMC தண்ணீர் வந்துள்ளது. இது வழங்கப்பட வேண்டிய நீரை விட 228.18 TMC அதிகமாகும்.

5. 2019 – 20ம் ஆண்டில் கர்நாடகாவிலிருந்து 275.16 TMC தண்ணீர் வந்துள்ளது. இது வழங்கப்பட வேண்டிய நீரை விட 97.91 TMC அதிகம்.

6. 2020 – 2021ம் ஆண்டில் கர்நாடகாவிலிருந்து 211.32 TMC தண்ணீர் கிடைத்துள்ளது. இது வழங்கப்பட வேண்டிய நீரைவிட 34 TMC அதிகமாகும்.

7. 2021 – 22ம் ஆண்டு, அதாவது நடப்பு ஆண்டில் 281 TMC தண்ணீர் கர்நாடகா மூலம் வந்திருக்கிறது. இது வழங்கப்பட வேண்டிய நீரை விட 103.82 TMC அதிகமாகும்.

8. கடந்த 4 ஆண்டுகளில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி 709 TMC நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா 1173 TMC தண்ணீரை வழங்கியுள்ளது.

9. அதாவது  தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 709 TMC தண்ணீருடன் கூடுதலாக 464 TMC தண்ணீரை கர்நாடகா வழங்கியுள்ளது.

10. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி செயல்படாத கர்நாடகா, மழை பெய்யாத காலங்களில் குறைவான தண்ணீரையும், பருவமழை காலங்களில் தேக்கி வைக்க முடியாத நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டு கணக்கு காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading