கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கொரோனோ தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் திருப்பி அனுப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்…

தமிழ்நாட்டில் கொரோனோ தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் திருப்பி அனுப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில், தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்துவருவதாக தெரிவித்த அவர், தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்கள் வாங்கக் கூடிய முகக்கவசங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் கிருமி நாசினிகளில் கலப்பட செய்யப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாட்டில் கொரோனோ தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், மருத்துவமனைகளில் மக்கள் பலபேருக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் திருப்பி அனுப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நாட்டில் குறுகிய காலத்தில் 80 சதிவிதம் மக்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் கும்பமேளா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் அதிகம் சேர்வதற்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றார்.

நடிகர் விவேக் மாரடைப்பு கார்ணமாகதான் உயிரிழந்தார் என்றும் இதுகுறித்து மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார். தடுப்பூசிப் எடுத்துக் கொண்டு 14 நாட்களுக்குள் எந்த நபராவது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த நபர்களின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

முதுநிலை மருத்துவர்களுக்கான தேர்வு உடனடியாக நடத்தியிருந்தால் 50 ஆயிரம் மருத்துவர்கள் கூடுதலாக இந்நேரத்தில் மருத்துவமனைகளில் பணியாற்ற நமக்கு கிடைதிருப்பர்கள் என்றும் தற்போது தமிழகத்தில் போதுமான மருத்துவர்கள் இல்லை எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.