மத்திய அரசு அறிவித்த ரூ.50 லட்சம் காப்பீடு திட்டம் ரத்து: புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய காப்பீடு திட்டத்துக்கான ஆலோசனை நிறுவனங்களுடன்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய காப்பீடு திட்டத்துக்கான ஆலோசனை நிறுவனங்களுடன் நடைபெற்றுவருகிறது.

நாட்டில் கொரோனா முதல் அலையின்போது முன்கள பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் காப்பீடு தொகை அறிவித்திருந்தது. இந்த காப்பீடு திட்டம் சென்ற மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது.

பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் வழங்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் 1.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த காப்பீடு தொகையைப் பெற இதுவரை 287 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். தொடக்கத்தில் இந்த காப்பீடு திட்டம் 90 நாட்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், “நாடு முழுவதும் 739 எம்பிபிஎஸ் மருத்துவர்கள் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இரண்டாவது கொரோனா நோய்த் தொற்றில் 3 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக ஆங்கில நாளேட்டில் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதில் மத்திய அரசு அறிவித்த ரூ.50 லட்சம் பழைய காப்பீடு திட்டம் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டு, புதிய காப்பீடு திட்டம் போடுவதற்காக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் எப்போது தொடங்கும் என அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.