மதுரை மாவட்டம் தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இந்த மருத்துவமனைக்கான பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் தகவல் தெரிவித்தார்.
சேலத்தில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?” என நீண்ட காலமாக நடைபெற்று கட்டுமான பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனியின் எப்படி இருக்கும் என்பதற்கான 4 நிமிட முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது.
மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் #AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.
2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா?
இதற்கே 10 ஆண்டுகள்… https://t.co/EkZPaMq8Gu
— M.K.Stalin (@mkstalin) June 17, 2025
இந்த நிலையில் 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “மதுரைக்கு வந்த உள்துறை அமைச்சர் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








