‘லியோ’ படத்தின் முன்பதிவு எப்போது தெரியுமா?

லியோ படத்தின் டிரைலர் வரும் 5-ம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் முன்பதிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து…

லியோ படத்தின் டிரைலர் வரும் 5-ம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் முன்பதிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் படத்திற்கான முன்பதிவு புதிய சாதனை படைத்துள்ளது. இதனிடையே இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்தது.

லியோ படத்தில் டிரைலர் வரும் 5-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அதுகுறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், தற்போது, தமிழ்நாட்டில் லியோ ப்ரீ புக்கிங் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, அக்டோபர் 14-ம் தேதி முதல் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.