முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

தமிழ்நாட்டில், கொரோனாவால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்சம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா பரவலின் இரண்டாம் அலையில், தமிழ்நாட்டில் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, தலா 5 லட்சம் ரூபாய், வைப்பீட்டு தொகையாக செலுத்தப்படும் என்றும் அந்த தொகை, அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும், வட்டியோடு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மேலும், கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ராணுவத்திற்கு உற்சாகமும், உணர்வு மிகுதியும் தேவை” – லெப்டினன்ட் ஜெனரல்

Halley Karthik

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

’பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்’ – அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்

G SaravanaKumar