கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

புதுச்சேரியில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வுமையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளான புதுச்சேரி, கடலூர்…

புதுச்சேரியில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வுமையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளான புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசைகளில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கிச்செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அடுத்த இரு தினங்களில் காற்றழுத்தம் நகரக்கூடும் என்பதால் இன்று முதல் 19 தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் புதுச்சேரிப்பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச்செல்லவேண்டாம். என புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.