திமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 திமுக வேட்பாளர்களில் 12 பெண் வேட்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். 173 தொகுதிகளில்…

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 திமுக வேட்பாளர்களில் 12 பெண் வேட்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஆலங்குளம் தொகுதியில் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, தூத்துக்குடியில் பி.கீதாஜீவன், மதுரை (மேற்கு) சி.சின்னம்மாள், மானாமதுரை (தனி) ஆ.தமிழரசி, கிருஷ்ணராயபுரம் (தனி) க.சிவகாமசுந்தரி, தாராபுரம் (தனி) கயல்விழி செல்வராஜ், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி செகதீசன், ஆத்தூர் (தனி) ஜீவா ஸ்டாலின், கெங்கவல்லி (தனி) ஜெ.ரேகா பிரியதர்ஷினி, திண்டிவனம் (தனி) பி.சீத்தாபதி சொக்கலிங்கம், குடியாத்தம் (தனி) வி.அமலு, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 12 தொகுதிகளில் 7 தொகுதிகள் தனி தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.