திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இதில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெறும் விழா செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்” நடைபெற இருந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் வருகின்ற செப்.19-ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெள்யிட்டுள்ள செய்தி குறிப்பில், “ கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 15.09.2026 அன்று நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 19.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




