இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழ் வணக்கம்

சாதியற்ற சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க iரட்டைமலை சீனிவாசன் ஆற்றிய சேவைகளை நினைவு கூறுகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் புகழ் வணக்கம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தீண்டாமை ஒழிப்பு, சாதிப் பாகுபாடு ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம், இட ஒதுக்கீடு மற்றும் நில உரிமை எனப் பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை சமரசமின்றி உறுதியுடன் போராடிய இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில், சாதியற்ற சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பெரும் சேவைகளை நினைவு கூறுகிறேன்.” என்று தெரி வித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.