தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்.9-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக, தவெக, அதிமுக, இடதுசாரிகல் மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. அதன்படி மதுராந்தகத்தில் வேட்பாளர்கள் இ. பரந்தாமன்(திமுக), மரகதம் குமரவேல்(தவெக), கணிதா சம்பத்(அதிமுக), பி. சுகந்தி(சிபிஐஎம்), கோ. ஜானகிராமன்(நாதக) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோல் தாரபுரத்தில் வேட்பாளர்கள் எஸ். சுகன்யா(திமுக), பி. சத்தியபாமா(தவெக), கே. பானுமதி(அதிமுக), லட்சுமணன்(சிபிஐ) மற்றும் எம். கார்த்திகா(நாதக) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று வேட்புமனு மீதான பரீசிலனை நடைபெற்றது. இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாதக ஆகிய வேட்பாளர்களின் மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.




