“பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “புயல் வந்த பிறகு சரி செய்யாமல் முன்னதாகவே தயாரக இருந்தால் அனைத்தையும் சரி செய்யலாம். இதுவரை மதுரை கோவிலில் தரிசனம் செய்யவில்லை. நான் குடமுழுக்கு விழாவில் தலையிடவில்லை. என் சார்பாக என் குடும்பத்தினர் கூட குடமுழுக்கில் யாரும் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலமாக பாஸ் விநியோகம் செய்யப்பட்டது.

எப்போதும் போல திமுகவை சார்ந்த ஒரு சிலர் இதுபோன்று சொல்லி வருகிறார்கள். திமுக அல்லது வேறு கட்சியாக இருந்தால் அமைச்சர்களுக்கும், அங்கு இருப்பவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்குவார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை என அப்பகுதியில் உள்ளவர்களே தெரிவிக்கிறார்கள்.

பிஎஸ்என்எல் லைனின் பணி செய்யும் போது மின்சார லயன் பாதிக்கப்பட்டு விட்டது. அதனால் நேற்றைய தினம் ஒரு சில இடங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுபோன்று மின்சார தட்டுப்பாடு அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. 10 வருடம் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டிடிவி. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சாதகமாக பேசி கொண்டு இருக்கிறார். இருப்பை காட்டி கொள்வதற்காக பேசி கொண்டு இருக்கிறார் டிடிவி. முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து துறை வாரியாக அந்தந்த துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.