’திமுகவின் நிலைப்பாடு – மாநில சுயாட்சி’ – திமுக செய்தித்தொடர்புச் செயலாளர்

திமுகவின் நிலைப்பாடு – மாநில சுயாட்சி என திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர்,…

திமுகவின் நிலைப்பாடு – மாநில சுயாட்சி என திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர், என்ன காரணத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார் எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தையே பிரிக்க முடியவில்லை எனவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காத கட்சி எனவும் சாடிய அவர், மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிகார போதையில் பேசுவதாகத் தெரிவித்தார். மேலும், மூன்றாகப் பிரித்தால் மூன்று திமுக முதலமைச்சர்கள் இருப்பார்கள் எனத் தெரிவித்த அவர், வருவாய் என்ன என்பதே தெரியாமல் மாநில அரசின் அதிகாரங்களைப் பறித்துக்கொள்வதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது’

மேலும், மாநில சுயாட்சி வேண்டும் என்பதற்காகப் போராடி வருவதாகக் கூறிய அவர், இந்தியா முழுமைக்கும் மின்வெட்டிற்கு நிலக்கரி இல்லை என்று கூறுவதாகக் குறிப்பிட்டார். இரண்டு பணக்காரர்களுக்கான ஆட்சியாக மத்திய ஆட்சி உள்ளது உள்ளது எனத்தெரிவித்த அவர், ஜெயக்குமாருக்கு அன்றைய தேதிக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் பேசுவார் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டைப் பிரிக்க மக்கள் கேட்டார்களா? எங்காவது கோரிக்கை எழுந்திருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், திமுகவின் நிலைப்பாடு மாநில சுயாட்சி எனக் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.