பாகிஸ்தானில் தென் மேற்கு மற்றும் பிற பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, மாகாண பேரிடர் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கன மழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இதனால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பலுசிஸ்தானில் திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜூன் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக பாகிஸ்தானில் 38 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த வாரம் பெய்த கன மழையில் பயணிகள் பேருந்து சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா