முக்கியச் செய்திகள் சினிமா

கவனம் ஈர்க்கும் சமுத்திரகனியின் ‘பப்ளிக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் ‘ரைட்டர்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி, காளி வெங்கட்டுடன் இணைந்து ‘பப்ளிக்’ படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் ரா.பரமன் இப்படத்தை இயக்க, இமான் இசையமைத்துள்ளார். கே.கே.ஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபுவும் நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த போஸ்டரில் சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத் உள்ளிட்ட பல மக்கள் தலைவர்கள் புகைப்படஙள் இடம்பெற்றுள்ளது. சமூக மாற்றத்திற்காக போராடிய தலைவர்கள் படங்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது, படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா” – முதலமைச்சர்

Halley Karthik

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா

Halley Karthik

எழுத்தாளரை மணந்தார் பிஷப்: அதிகாரங்களை பறித்தது ஆயர் பேரவை

Ezhilarasan