தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் அக். 15 ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட மாநில அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளில் பங்கேற்றனர்.
கடந்த அக்.15-ஆம் தேதி தொடங்கிய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டிகளுக்கு ரூ. 83.36 கோடி செலவாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டிகளி. 27,000 பேர் வரை பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2026 முதலமைச்சர் கோப்பை நிறைவு சென்னை நேரு உள் விளைடாட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிக்ழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துவக்க உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனையடுத்து ராமநாதபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாடமி, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூர் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பல்நோக்கு விளையாட்டு வளாகம் ஆகியவற்றை திறந்துமுதலமைச்சர் ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயிலாக தொங்கிவைத்தார்.
தொடர்ந்து விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு நிதியுதவி வழங்கினார். மேலும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்.




