முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி

மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

 

தமிழ்நாட்டில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், ஆயிரத்து 375 ஒன்றிய கவுன்சிலர், 2 ஆயிரத்து 779 கிராம ஊராட்சி தலைவர், 19 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இரவு முழுவதும் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 108 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 5 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 724 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 132 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Ezhilarasan

சங்கரநாராயண சுவாமி கோவில் திருவாதிரை திருவிழா: சுவாமி வீதி உலா

Niruban Chakkaaravarthi

பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

Halley karthi