முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

கோயில்கள், தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. இந்நிலையில், வரும் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி தினத்தன்று கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விஜயதசமி தினத்தன்று கோயில்களைத் திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்தும் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் வரையிலான பள்ளிகளை நவம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளைத் திறப்பதற்கு முன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை, மாநில அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது, பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தளர்வுகளில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிப்பதா அல்லது இப்போதைய நிலையைத் தொடர்வதா என்பன போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசிக்க இருக்கிறார். ஆலோசிக்கவுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் சுகாதாரம், வருவாய், பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

சென்னை உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி?

Ezhilarasan

வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக:முதல்வர்!

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு

Gayathri Venkatesan