முக்கியச் செய்திகள் விளையாட்டு

அடங்குமா, அடக்குமா? கொல்கத்தா -டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் தொடரில், வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இப்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வென்றது.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்லும் 2-வது அணி எது? என்பதற்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டி இன்று நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. லீக் சுற்றில் முதலிடம் பிடித்த டெல்லி அணி, சென்னைக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில், சிறப்பாக ஆடியும் தோல்வியை தழுவியது.


அந்த அணியில், பிருத்வி ஷா, தவான், ரிஷப், ஹெட்மயர், ஸ்ரேயாஸ் ஐயர் என சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். பந்துவீச்சிலும் ரபடா, நோர்டியா, அவேஷ்கான், அக்‌ஷர் பட்டேல் ஆகியோரில் மிரட்டலில் அந்த அணி கலக்கி வருகிறது. இருந்தாலும் அன்றைய நிலை மையை பொறுத்தே போட்டியிம் தன்மை இருக்கும். போட்டி நடக்கும் சார்ஜா மைதானம் மெதுவான தன்மை கொண்டதால், இங்கு 150 ரன்களுக்கு மேல் எடுத்தாலே அது சிறந்த ஸ்கோராக இருக்கும் என்கிறார்கள். இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத டெல்லி அணி, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழையும் முனைப்புடன் களமிறங்க இருக்கிறது.

கொல்கத்தா அணியில், வெங்கடேஷ் அய்யர், சுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அதோடு அந்த அணியின் சுழல் பந்துவீச்சு அசத்தலாக இருக்கிறது. சுனில் நரேன், வருண் ஆகியோர் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்குகிறார்கள். ஏற்கனவே 2 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியுள்ள, 3-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை உருவாக்க தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement:
SHARE

Related posts

அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

Ezhilarasan

அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க தடைகோரி மனு!

“போராட்ட உரிமை வரைமுறையற்றதல்ல” : உச்ச நீதிமன்றம்!

Jayapriya