தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் புதிதாக, 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கோவை மாவட்டத்தில், 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக தொற்று கண்டறியப்படாத நிலையில், 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 473 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒருவர் மட்டுமே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாட்டில் நேற்று ஒர நாளில் 50 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.







