திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது என்று ஒன்றிய அரசு ஆராய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பசுமை சைதை திட்டத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை சைதாபேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று மட்டும் ஒன்றிய அரசிடமிருந்து 1,36,610 தடுப்பூசிகள் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இதுவரை 1,50,26,550 தடுப்பூசிகள் மொத்தமாக வந்துள்ளன எனவும் தெரிவித்தார். ஜூலை மாத தொகுப்பிலிருந்து இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் வரவிருப்பதாகவும் கூறினார். மேலும் தடுப்பூசி தட்டுப்பாட்டை தீர்க்க, ஒன்றிய அரசிடம் பேசி தடுப்பூசிகளை வாங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடுகள் பார்க்கப்படுவதாக உதவிப் பேராசிரியர் புகார் அளித்துள்ள புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார். மேலும் சென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது என்று ஒன்றிய அரசு ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.