முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது ஐந்தாயிரத்துக்கும் கீழ் தொற்று குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 84 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து 5 ஆயிரத்து 044 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 13 ஆயிரத்து 930 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் புதிதாக 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 416 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஈரோட்டில் 411 பேருக்கும் சேலத்தில் 279 பேருக்கும் கோவையில் 498 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 19 பேருக்கும் பெரம்பலூரில் 29 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு!

Jeba Arul Robinson

டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Saravana Kumar

“படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும்”: சரோஜா

Halley karthi