திமுக முப்பெரும் விழா – விருது பெறுவோர் விவரம் வெளியீடு!

திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

கரூரில் செப்டம்பர் 17-ம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதில்,

பெரியார் விருது – கழக துணைப் பொதுச்செயலாளரும் -கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்படும்.

அண்ணா விருது – தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப.சீத்தாராமனுக்கு வழங்கப்படும்.

கலைஞர் விருது – நூற்றாண்டு கண்டவரும் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் -அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.இராமச்சந்திரனுக்கு வழங்கப்படும்.

பாவேந்தர் விருது – கழக மூத்த முன்னோடியும் – தலைமைச் செயற்குழு உறுப்பினரும் – குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்படும்.

பேராசிரியர் விருது – கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் – காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் – சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் இராமலிங்கத்துக்கு வழங்கப்படும்.

மு.க.ஸ்டாலின் விருது – ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.