மகளிர் டி20 உலக கோப்பை: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இன்று மோதல்!

மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

10-வது மகளிர் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று 8-வது முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்தி இடையே நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5-வது முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் 2026 மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா 7-வது முறையாக கோப்பையை வெல்ல போராடும். அதேபோல இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்ல தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறு விறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.