சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புஜாரா ஓய்வு!

கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு, தேசிய கீதம் பாடிக்கொண்டு, ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் வைக்கும்போது என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பது, அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் அவர்கள் சொல்வது போல், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும்,

மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவரின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். புஜாராவின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.