முக்கியச் செய்திகள் தமிழகம்

திருவொற்றியூரில் களமிறங்கும் சீமான்..

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரே மேடையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். வழக்கம்போல், இந்த சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, 50 சதவீதம் மகளிர் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய சீமான் சட்டப்பேரவைத் தேர்தல் மதவாதத்திற்கு எதிரான போர் என்றார். மேலும், வேளாண்மை தொழிலை, படித்தவர்களும் செய்ய முன்வர வேண்டும், என்றும் சீமான் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய சீமான், நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை வழங்குவோம் என்றும், கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவோம் என்றும் கூறினார். தான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறேன், என சீமான் கூறியதும் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

Advertisement:

Related posts

அறத்தின் பக்கம் நிற்பவரை பார்த்து பாஜகவின் B-TEAM என்பதா? – கமல்

Saravana

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!

Jeba

இ-பதிவு தளத்தில் திருமணத்திற்கான அனுமதி திடீர் நீக்கம்!

Karthick