முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒரு மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவை தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் (கன்னியாகுமரி) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது,

திமுக – காங்கிரஸ் உடனான சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு மகிழ்ச்சியில் முடிந்துள்ளது என கே.எஸ். அழகிரி தெரிவித்தார். இவரை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் திணேஷ் குண்டு ராவ், திமுக உடனான தொகுதி பங்கீடு திருப்தி அளிப்பதாக கூறிய அவர் , இந்த தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுதைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு இடங்களுகம் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும் மற்றும் மனித நேசிய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்துள்ள 234 தொகுதிகளில் இதுவரை 48 இடங்களை கூட்டணி கட்சிகளுக்காக திமுக ஒதுக்கிவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பொங்கல் பண்டிகை; சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Saravana

புதுவகையான தாவரத்திற்கு சரத் பவார் பெயர் சூட்டப்பட்டது!

Gayathri Venkatesan

சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைக்கப்படும்: சைதை துரைசாமி!

Karthick